"நான் செத்துவிட்டதாக சொல்கிறார்கள்.." ப்ரிகோஜினின் புது வீடியோ.. ரஷ்யாவில் கிளம்பும் அடுத்த புயல்?
மாஸ்கோ: வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் உயிருடன் இருப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது அது உண்மை தானா என்பதை பார்க்கலாம்.
கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கலகம் செய்தவர் வாக்னர் தனியார் ராணுவ தலைவர் ப்ரிகோஜின். இது ரஷ்யாவையே புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருப்பினும், சில நாட்களில் அந்த கலகத்தை அவர் கைவிட்டார்.

அதன் பிறகு அவர் புதினை சந்தித்ததே நேரடியாக விளக்கமும் கொடுத்தார். இருப்பினும், அப்போதே மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரும் ப்ரிகோஜின் விரைவில் கொலை செய்யப்படுவார் என்றே கூறினர்.
வீடியோ: அதற்கேற்ப கடந்த வாரம் ப்ரிகோஜின் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது. அவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், விமானம் கிளம்பியது முதல் நன்றாகவே இருந்த நிலையில், கடைசி 30 நொடிகளில் அதில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும், அது விபத்து இல்லை, திட்டமிட்ட கொலைக்கு முன்பு வரை விமானத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. கடைசி நொடிகளில் தான் ஏதோ நடந்துள்ளது.
இதற்கிடையே வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் வெளியிட்ட புது வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ப்ரிகோஜின் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
ஷாக் சம்பவம்: வாக்னர் குழுவுக்குத் தொடர்புடைய டெலிகிராம் சேனலில் இந்த வீடியோ முதலில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ப்ரிகோஜின் தனது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசுகிறார்.. இந்த வீடியோவில் ப்ரிகோஜின் ராணுவ உடையுடன் இருக்கிறார்.. தொப்பி ஒன்றை அணிந்திருந்த அவர், வலது கையில் அவர் எப்போதும் கட்டி இருப்பதைப் போல வாட்சும் கட்டியுள்ளார்.
கடந்த வாரம் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ப்ரிகோஜின் ஒன்பது பேருடன் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆப்பிரிக்காவில் அவர் உயிரிழக்க சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது இருப்பினும், அதை உறுதி செய்ய முடியவில்லை.
A video of Prigozhin appeared that is reportedly filmed in Africa not long before his death.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) August 31, 2023
"So, fans of discussing my death, intimate life, earnings, etc., I am doing fine," Prigozhin says. pic.twitter.com/UcIKpgLNZi
என்ன சொல்கிறார்: அவர் இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோக்களில் அணிந்ததை போலவே இதிலும் உடை அணிந்துள்ளார். எனவே, இந்த வீடியோ உண்மை என்றே தெரிகிறது. மொத்தம் 26 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, ஓடும் வாகனத்தில் எடுக்கப்பட்டதை போலவே தெரிகிறது. இந்த வீடியோவில் அவர் ரஷ்ய மொழியில் பேசும் நிலையில், அவரே அந்த வீடியோ ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் மேலும் கூறுகையில், "நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா, நான் எப்படி இருக்கிறேன் என்று சிலர் விவாதித்து வருகிறார்கள்.. நான் இப்போது ஆகஸ்ட் 2023 பிற்பகுதியில் ஆப்பிரிக்காவில் இருக்கிறேன்.. என்னை அழிக்கச் சிலர் நினைக்கிறார்கள்.. என்னை முற்றிலுமாக அழிக்கவே விரும்புகிறார்கள். எல்லாம் ஓகே தான்.. பார்த்துக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் பெரும் விவாகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை உக்ரைன் உள்துறை ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ பகிர்ந்துள்ளார். ப்ரிகோஜினின் மரணம் குறித்த தகவல்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,இந்த வீடியோ முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications