For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். அரசு நியமித்த அயல்நாட்டு தூதர் பதவிகளுக்கும் வருகிறது ஆபத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆளுநர்களை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதரர்களை பதவியில் இருந்து இறக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்களின் கருத்துக்கு ஒத்துப்போகும் அதிகாரிகள், அயல்நாடுகளின் தூதர்களாகவும், உயர் கமிஷனர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அவர்களை நீக்கிவிட்டு தங்,களுக்கு வேண்டிய அதிகாரிகளை அப்பணியிடங்களில் நியமிக்க மத்திய பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலில் இருப்பவர் பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ராஜன். இந்திய கடல் படையின் முன்னாள் அட்மிரலும் தற்போதைய கனடா தூதருமான நிர்மல் குமார் வர்மா, நார்வே நாட்டுக்கான இந்திய தூதர் நார்மன் அனில்குமார் ஆகியோரும் நீக்கப்படும் அதிகாரிகள் பட்டியலில் உள்ளனர்.

பிரிட்டனுக்கான அடுத்த தூதராக மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஸ்வபன் தாஸ்குப்தா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நிலவரங்களை ஆய்வு செய்யும் கட்டுரையாளர் பிரமா செல்லானே உயர் தூதராகலாம் என்று தெரிகிறது. ஆனால் எந்த நாட்டுக்கு அவர் பணியமர்த்தப்பட உள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

English summary
Soon after forming the NDA government at the Centre, Prime Minister Narendra Modi-led government first replaced the Congress appointed governors in various states and now the same exercise is likely to be carried over the various Indian high commissioners and ambassadors appointed in foreign countries. Among the list of various high-level overseas officials to be replaced, first name is Ranjan Mathai, the India's High Commissioner to the UK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X