அக்னிபாத் திட்டம்.. பிரதமர் தொகுதியில் வெடித்த போராட்டம்.. ரயில் நிலையம் சூறையாடல்..!
வாரணாசி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியிலேயே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரயில் நிலையத்தை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவுகளை குறைக்க அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பின் 25 சதவீதம் பேர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மீதமிருப்பவர்கள் ஒய்வூதியம் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இந்தத் திட்டத்திற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை திரும்பபெறக் கோரி பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட 10 மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
இதனிடையே அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா ரயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல் ஹரியானா மாநிலம் குருகிராமில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனிடையே அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான பதாகைகளுடன் முகத்தை துணியால் மூடி வாரணாசியின் பாலியா ரயில் நிலையம் வந்த ஏராளமான போராட்டக்காரர்கள், ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, ரயில் நிலையத்தை சூறையாடினார். இதன்பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பிரதமரின் தொகுதியிலேயே போராட்டம் வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரயில் நிலைய தாக்குதல் சம்பவம் காரணமாக வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications