For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷின்சோ அபேவின் கொலையை அக்னிபாத் திட்டத்துடன் ஒப்பீடு.. மம்தா கட்சியின் பத்திரிகை பரபர செய்தி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலையை அக்னிபாத் திட்டத்துடன் ஒப்பிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை ‛ஜாகோ பங்களா' செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. ஜப்பானின் மிக நீண்டகால பிரதமராக அறியப்படும் இவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார்.

 இந்து மாணவிகளின் நலனுக்காக.. பள்ளியில் கந்த சஷ்டி பாட அனுமதி கொடுங்க! இந்து முன்னணி கலெக்டரிடம் மனு இந்து மாணவிகளின் நலனுக்காக.. பள்ளியில் கந்த சஷ்டி பாட அனுமதி கொடுங்க! இந்து முன்னணி கலெக்டரிடம் மனு

இவர் கடந்த 2020ல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஷின்சோ அபே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஷின்சோ அபே படுகொலை

ஷின்சோ அபே படுகொலை

இந்நிலையில் நேற்று நாரா பகுதியில் ஷின்சோ அபே மக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த நபர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு காயமடைந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஜப்பான் கடற்படை வீரர் கைது

ஜப்பான் கடற்படை வீரர் கைது


இதற்கிடையே துப்பாக்கியால் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபரை உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் டெட்சுயா யமகாமி (வயது 41) என்பதும், அவர் ஜப்பானிய கடற்படையின் தற்காப்பு படையின் வீரராக பணியாற்றி இருந்ததும் தெரியவந்தது. மேலும் ஷின்சோ அபேவின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சொந்தமாக துப்பாக்கி தயாரித்து அவரை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகின.

அக்னிபாத் திட்டத்துடன் ஒப்பீடு

அக்னிபாத் திட்டத்துடன் ஒப்பீடு

இந்நிலையில் தான் ஷின்சோ அபேவின் படுகொலையையும் அக்னிபாத் திட்டத்தையும் சேர்த்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‛ஜாகோ பங்களா' முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளது. ஷின்சோ அபேவின் படுகொலை தொடர்பான செய்தியை ‛ஷின்சோஅபேவின் கொலையில் அக்னிபாத் நிழல்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறாத ஊழியர்

ஓய்வூதியம் பெறாத ஊழியர்

மேலும் ஜப்பானின் கடற்படையின் தற்காப்பு படையில் 3 ஆண்டு பணிபுரிந்து ஓய்வூதியம் பெறாத ஊழியர் ஷின்சோ அபேவை கொலை செய்துள்ளார். இதற்கிடையே தான் இந்தியாவில் 4 ஆண்டு அக்னிபாத் திட்டம் அமலாக உள்ளது என செய்தியில் கூறப்பட்டுள்ளது. தற்போது இது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.

ஓப்பீடு ஏன்?

ஓப்பீடு ஏன்?


ஜப்பானிலும் பாதுகாப்பு பிரிவில் ராணுவம், கடற்படை, விமானப்படைகள் உள்ளது. இந்த முப்படைகளுக்குள் 3 ஆண்டு பணி செய்யும் வகையில் ஆள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. மாறாக 3 ஆண்டு பணி முடியும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தான் இந்தியாவில் தற்போது முப்படைகளுக்கான 4 ஆண்டு பணிக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.

இந்தியாவில் அக்னிபாத் திட்டம்

இந்தியாவில் அக்னிபாத் திட்டம்

இந்தியாவில் அக்னிபாத் எனும் திட்டத்தின் கீழ் முப்படைகளில் குறுகிய காலமாக 4 ஆண்டு வரை இஞைர்கள் பணி செய்ய முடியும். இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மாதம் உத்தர பிரதேசம், பீகார், தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. வன்முறையில் ரயில்கள் தீவைக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee's Trinamool Congress mouth piece 'Jago Bangla' says Agnipath Shadow in Japan PM ShinzoAbe's Killing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X