For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிபிஐ, அமலாக்க பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிபிஐ, அமலாக்கப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிபிஐஎல் என்னும் என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று இவ்வழக்கு தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த அமைப்புக்காக பிரபல வக்கீல் பிரசாந்த் பூசன் ஆஜரானார்.

Aircel-Maxis case: SC issues notice to CBI, ED

இந்த வழக்கில் தொடர்புள்ள முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் டிவி சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்படாதது ஆச்சரியம் தருவதாகவும், அவற்றையும் வழக்கில் இணைக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டார்.

இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இதற்கு பதிலளிக்குமாறு சிபிஐ, அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணை வரும் ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
SC issues notice to CBI, ED on a plea seeking attachment of assets of Aircel company in the Aircel-Maxis case. Next hearing on Jan 6, 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X