For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ் பண்ணிட்டேனே ஒபாமாவை மிஸ் பண்ணிட்டேனே: அகிலேஷ் யாதவ்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தாஜ் மஹாலில் வரவேற்க வேண்டியது மிஸ்ஸாகிவிட்டது என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். நேற்று டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் ஒபாமாவும், மிஷலும் சவுதி கிளம்பிச் சென்றனர்.

Akhilesh Regrets Missing Opportunity to Welcome Barack Obama in Agra

அவர்கள் இன்று ஆக்ரா சென்று காதல் சின்னமான தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்கவிருந்தனர். ஆனால் சவுதிக்கு செல்ல வேண்டியதால் ஆக்ரா பயணம் ரத்தானது. உண்மையில் தாஜ் மஹாலில் மாவட்ட நிர்வாகம் செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமெரிக்க அதிகாரிகளை அதிருப்தி அடைய வைத்ததால் தான் அந்த பயணம் ரத்தானது என்று கூறப்படுகிறது.

Akhilesh Regrets Missing Opportunity to Welcome Barack Obama in Agra

இந்நிலையில் இது குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொண்டேன். தாஜ் மஹாலில் ஒபாமாவை வரவேற்கும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav has said in a tweet that he regrets missing the opportunity to welcome US President Barack Obama, who cancelled his plan to visit the iconic Taj Mahal in Agra today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X