யோகா செய்து அமித்ஷா குறைத்த உடல் எடை எவ்வளவு தெரியுமா? பாபா ராம்தேவ் சொன்ன ரகசியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: யோகா பயிற்சி செய்து வந்ததன் மூலம் பாஜக தலைவர் அமித் ஷா 20 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம், உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுக்க யோகா குறித்த பேச்சுதான்.

இதில் யோகா குரு பாபா ராம்தேவை மறக்க முடியுமா. வயிற்றை வளைத்து நெளித்து அவர் செய்யும் யோகாசனங்கள் உடலை சில்லிட வைப்பவை.

விளையாட்டு

விளையாட்டு

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த யோகா முகாமில் பேசிய ராம்தேவ், யோகா என்பது வெறும் பயிற்சி அல்ல என்றும் அதுவும் ஒரு விளையாட்டு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

ஒலிம்பிக் விளையாட்டில் யோகா சேர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ராம்தேவ் தெரிவித்தார்.மேலும் யோகா செய்து வந்ததன் மூலம் பாஜக தலைவர் அமித் ஷா 20 கிலோ எடையை குறைத்துள்ளார் என்றும் ராம்தேவ் கூறினார்.

முகாம்

முகாம்

ராம்தேவின் உதவியோடு குஜராத் அரசு இன்று அகமதாபாத் ஜிஎம்டிசி மைதானத்தில் பெரும் யோகா முகாமை நடத்த உள்ளது. இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு உலக சாதனை படைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சாதனை

சாதனை

முன்பு டெல்லியில் 2 வருடங்கள் முன்பு பிரதமர் மோடி பங்கேற்ற யோகா முகாமில் அதிகபட்சமாக 35085 பேர் பங்கேற்றதே சாதனை. அதை முறியடிக்க உள்ளதாக ராம்தேவ் ஏற்கனவே மோடியிடம் கூறியிருந்தார். எனவே இன்றைய முகாமில் டெல்லி முகாமைவிட அதிக மக்களை ஈர்க்க ராம்தேவ் முயற்சிகள் எடுத்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி ஹெல்த் சென்டர்கள் மூலம் யோகா பரப்பப்படும். யோகாவை பரப்ப உலகெங்கும் பத்தாயிரம் சென்டர்கள் ஆரம்பிக்கப்படும். அதில் ஆயிரம் மையங்கள், இந்தியாவில் செயல்படும். இவ்வாறு ராம்தேவ் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yoga guru Baba Ramdev on Tuesday claimed that Bharatiya Janata Party president Amit Shah lost as much as 20 kgs, thanks to practicing yoga.
Please Wait while comments are loading...