அதி தீவிர "சூப்பர்" புயலாக மாறிய ஆம்பன்.. மிக மோசமான சேதத்தை உண்டாக்கும்.. வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சூப்பர் புயலாக உருவெடுத்து இருக்கும் ஆம்பன் புயல் மிக மோசமான சேதத்தை விளைவிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Recommended Video
Cyclone Amphan very intense | Heavy rainfall in parts of TN |
கொல்கத்தா: சூப்பர் புயலாக உருவெடுத்து இருக்கும் ஆம்பன் புயல் மிக மோசமான சேதத்தை விளைவிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. ஆம்பன் புயல் தற்போது அதி தீவிர சூப்பர் புயலாக மாறியுள்ளது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது.
இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும். ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் இருந்து இந்த புயல் 650 கிமீ தூரத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications