For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து 16 பேர் பரிதாப சாவு! 20 பேர் படுகாயம்.. டிரைவர் தூங்கியதால் விபரீதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே லாரி கவிழ்ந்து அதில் பயணித்த 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் இருந்து விசாகபட்டணம் நோக்கி இன்று அதிகாலை லாரியொன்று சென்றுகொண்டிருந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் பயணித்தனர். ராஜமுந்திரி நகரில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கண்டேபள்ளி என்ற பகுதியின் அருகே லாரி சென்றபோது, சாலையோர பள்ளத்தில் லாரி எதிர்பாராமல் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரைவர் தூங்கியபடி வாகனத்தை ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆந்திர நிதி அமைச்சர் எனமல ராமகிருஷ்ணுடு சம்பவ இடத்தை பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

உள்துறை அமைச்சர் நிம்மகயலா சின்ன ராஜப்பாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்த மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

English summary
16 daily farm labourers died when the lorry in which they were traveling overturned in a road side ditch, at Andhra pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X