தொடரும் செம்மரம் கடத்தல்.. ஆந்திராவில் 11 தமிழர்கள் கைது!
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான 1.58 டன் எடை கொண்ட செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட வனப்பகுதியில் விலையுயர்ந்த செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. சர்வதேச சந்தையில் செம்மர கட்டைகளுக்கு அதிக மவுசு இருப்பதால் சமூக விரோதிகள் செம்மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தி கோடி கணக்கில் பணம் சம்பாதித்த வருகின்றனர்.

ஆந்திர மாநில அரசும், செம்மரக் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், செம்மரம் கடத்துவது ஓய்ந்தபாடில்லை. செம்மர கடத்தலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுவதாக ஆந்திர மாநில போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான தமிழர்கள் செம்மர கடத்தலில் ஈடுபட்டபோது ஆந்திர மாநில போலீசாரால் என்கவுண்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தற்போது செம்மர கடத்தலில் ஈடுபட்ட 11 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொரதட்டூர் துரசானிப்பள்ளி அருகே பொரதட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணய்யா தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.58 டன் எடை கொண்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 58 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு செம்மர கடத்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், ஒரு பொலிரோ ஜீப், 4 இருசக்கர வாகனங்கள், மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தக்கூடிய கோடாலி, ரம்பம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications