For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலுவான லோக்பால் மசோதா: டிச.10 முதல் அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்

By Mathi
Google Oneindia Tamil News

Anna Hazare to observe indefinite fast for Lokpal Bill from Dec 10
டெல்லி: வலுவான லோக்பால் மசோதா கோரி டிசம்பர் 10ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அண்ணாஹசாரே அறிவித்துள்ளார்.

வரும் குளிர் கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதவை நிறைவேற்ற வேண்டும் என்பது ஹசாரேயின் கோரிக்கை. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஊழல் தடுப்பு மசோதாவை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசு மீது தன் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், லோக்பால் மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றாமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது. வலுவான லோக்பாலுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி வரும் 10-ந் தேதி யாதவ்பாபா கோயிலில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறேன் என்றார்.

English summary
Social activist Anna Hazare will launch indefinite hunger strike for a strong Lokpal Bill, at Yadavbaba temple in Ralegan Siddhi from December 10. Announcing his agitation, Hazare has asked the Centre to "show courage" in bringing in the Bill in the Winter Session of Parliament, beginning from December 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X