வானில் பறந்தபோதே சட்டென விழுந்து தீப்பிடித்த ராணுவ ஹெலிகாப்டர்.. பயங்கர விபத்து.. மீட்புபணி தீவிரம்
கவுஹாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடம் மலைபாங்கான இடம் என்பதால் அங்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஹெலிகாப்டர் மற்றும் வனப்பாதை வழியாக மீட்பு குழு விரைந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் உள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் குறுகிய தூர பயணத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அடர் வனம், பனிப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஹெலிகாப்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்து
இந்நிலையில் தான் அருணாச்சல பிரதேச மாநிலம் அப்பர் சியாங் மாவட்டம் சிங்கிங் கிராம பகுதியில் இந்திய ராணுவத்தின் இலகுரக ஹெலிகாப்டர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வானத்தில் இருந்து விழுந்தது. சிங்கிங் கிராமத்தின் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் தீப்பற்றி எரிந்தது. இந்த ஹெலிகாப்டரில் எத்தனை பேர் சென்றனர்? அவர்களின் நிலை என்ன? என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

மீட்பு பணி துவக்கம்
ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ள சிங்கிங் கிராமத்துக்கு செல்ல சாலை வசதிகள் இல்லை. வனப்பகுதியில் தொங்கு பாலத்தை கடந்து தான் இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டும். இதனால் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இருப்பினும் தற்போது உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பாதை வழியாகவும், ராணுவ ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்பு பணிக்கு வீரர்கள் விரைந்துள்ளனர்.

விபத்து நடந்தது எப்போது?
இதுபற்றி அப்பர்சியாங் மாவட்ட அதிகாரி ஜூம்மார் பாசார் கூறுகையில், ‛‛விபத்து நடந்த இடத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. இருப்பினும் மீட்பு குழு அங்கு விரைந்துள்ளது. லிகாபாலியில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து காலை 10.43 மணிக்கு நடந்துள்ளது'' என்றார். இதற்கிடையே ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்த நிலையில் புகை வெளிவரும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர் வருத்தம்
இதுபற்றி மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டரில், ‛‛அருணாச்சல் பிரதேச மாநிலத்தி்ன மேல்சியாங் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கவலையளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்'' என கூறியுள்ளார்.

இந்த மாதத்தில் 2வது விபத்து
இந்தியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதத்தில் மட்டும் அருணாச்சல் பிரதேசத்தில் 2வது முறையாக ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்த மாத துவக்த்தில் தவாங் அருகே சீட்டா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியபோது விமானி ஒருவர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications