காஷ்மீரில் வீடு வீடாக தீவிரவாதிகளை தேடும் பணிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் 300-க்கும் மேற்பட்டோர் ஊருடுவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பேரில் 2000-க்கும் அதிகமான வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணிகளில் கடந்த 4-ஆம் தேதி ஈடுபட்டிருந்தனர்.

 Army is searching for terrorists in Kashmir

அவர்கள் பெரும் திட்டத்துடன் காஷ்மீரில் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவ வீரர்கள் தயார் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஷோபியான் கிராமத்தில் உள்ள வீடுகளில் பதுங்கியுள்ளதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பேரில் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வீடு வீடாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

உளவுத்துறையின் ரகசிய தகவலின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இது தோராயமான எண்ணிக்கைதான் என்றாலும் மேலும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Based on IB's secret inputs, Indian Army is searching for terrorists in Shopian.
Please Wait while comments are loading...