For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் தண்ணீல நடக்கமாட்டேன்! மீட்புபடை வீரரின் முதுகில் தொற்றிய பாஜக எம்எல்ஏ! அசாம் மழையில் சம்பவம்

Google Oneindia Tamil News

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பை பார்க்க சென்ற பாஜக எம்எல்ஏ தண்ணீரில் நடப்பதை தவிர்க்க மீட்புபடை வீரரின் முதுகில் தொற்றினார். இதையடுத்து அந்தவீரர் தனது முதுகில் எம்எல்ஏவை சுமந்து ரப்பர்படகுக்கு அழைத்து சென்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக அசாம் உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரம்மபுத்ரா ஆற்றில் அபாயகட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களின் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேவலம்.. அவமானம்.. மாநிலங்களவை பதவிக்காக இப்படியா? காங்கிரஸை விளாசிய பாஜக நாராயணன் திருப்பதி!கேவலம்.. அவமானம்.. மாநிலங்களவை பதவிக்காக இப்படியா? காங்கிரஸை விளாசிய பாஜக நாராயணன் திருப்பதி!

9 பேர் பலி- 6.62 லட்சம் பேர் பாதிப்பு

9 பேர் பலி- 6.62 லட்சம் பேர் பாதிப்பு

மேலும் பல மாவட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 மாவட்டங்களில் 6.62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால்பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் உருக்குலைந்துள்ளன. இதனால் போக்குவரத்து வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் 48 ஆயிரம் பேர்

முகாம்களில் 48 ஆயிரம் பேர்

மழை வெள்ளத்தால் ஹோஜாய், சாசார் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மட்டும் தலா ஒரு லட்சம் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 248 நிவாரண முகாம்களில் 48 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீரரின் முதுகில் பாஜக எம்எல்ஏ

வீரரின் முதுகில் பாஜக எம்எல்ஏ

இந்நிலையில் தான் லும்டிங் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சிபு மிஸ்ரா வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்றார். அவருக்காக ரப்பர் படகு தயார் நிலையில் இருந்தது. முழங்கால் வரை சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதை கடந்து தான் எம்எல்ஏ ரப்பர் படகில் ஏற வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து எம்எல்ஏ சிபு மிஸ்ரா மீட்பு பணியில் ஈடுபட்ட வீரரின் முதுகில் தொற்றிக்கொண்டார். அந்த வீரர் தனது முதுகில் எம்எல்ஏவை சுமந்து ரப்பர் படகில் இறக்கினார்.

 கிளம்பிய எதிர்ப்பு

கிளம்பிய எதிர்ப்பு

தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. எம்எல்ஏ சிபு மிஸ்ராவின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மழை வெள்ள பாதிப்பில் மீட்பு பணிக்கு வந்த வீரர் ஒருவரின் முதுகில் தொற்றி ரப்பர் படகுக்கு சென்றதை மிகவும் தவறான விஷயம் என அவர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

English summary
The BJP MLA from Lumding Assembly, Sibu Misra, piggybacked on a rescue worker during his visit to flood-hit Hojai district. A video of the incident released and people criticized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X