கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லையா.. வீட்டுக்குள்ளேயே கிடங்க... ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது?
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
நாட்டில் கொரோனா 3-வது பல மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டியதாக பதிவாகி உள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் ஊரடங்குகள், முழு லாக்டவுன் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு நாட்களில் முக கவசம் அணியாதவர்கள், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

முதல்வர் பேச்சால் சர்ச்சை
இந்த நிலையில் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நேற்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமில்லாதவர்களை ஹோட்டல்கள், பொது இடங்கள், கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம். அப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்கலாம் என்றார்.

வீட்டுக்குள் இருங்க
கடந்த வாரமும் ஹிமந்த பிஸ்வா இதேபோல் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ஜனவரி 16-ந் தேதி முதல் பொது இடங்களில் நடமாட அனுமதி இல்லை என கூறியிருந்தார். அஸ்ஸாமில் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களில் 767,253 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசிகள் இம்மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
Recommended Video

கொரோனா பாதிப்பு நிலவரம்
அஸ்ஸாமில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 653,717. அஸ்ஸாமில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 6,217. இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 622,205. அஸ்ஸாமில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 23,948. அஸ்ஸாமில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications