For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: ஹசீனாவைச் சந்தித்து முறையிட இந்திய தூதருக்கு சுஷ்மா உத்தரவு

இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வங்கதேச பிரதமரிடம் முறையிடுமாறு இந்திய தூதர்களுக்கு வெளியுற்வுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது மீண்டும் அதிகரித்துள்ள தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனாவை சந்தித்து முறையிட இந்திய தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து அவர்களது நலவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனாவைச் சந்தித்து முறையிட வேண்டும் என்று தூதரக அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Attacks On Hindus: Indian Envoy To Take Up Issue Sheikh Hasina

வங்கதேசத்தில் பிரஹன்பாரியா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இந்துக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியும், கோவில்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 50- க்கும் மேற்பட்டவர்களைவ வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்தும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஏற்கனவே வங்கதேச அரசிடம் இந்தியாவின் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை இந்துக்களின் நிலங்களை அபகரிக்கும் விதமாக இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக வங்கதேச தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
In the wake of fresh attacks on Hindus in Bangladesh, External Affairs Minister Sushma Swaraj has directed the Indian High Commissioner in Dhaka to convey to Prime Minister Sheikh Hasina India's grave concern over safety and security of the community in that country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X