சோனியாவை எதிர்த்து போட்டியிடுங்க... உமாபாரதியை தூண்டிவிடும் ராம்தேவ்

Subscribe to Oneindia Tamil

Baba Ramdev wants Uma Bharti to contest against Sonia Gandhi
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து மூத்த பாஜக தலைவர் உமாபாரதி போட்டியிட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பாபா ராம்தேவ் கூறியதாவது:

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து உமாபாரதி போட்டியிட வேண்டும். உமாபாரதிக்கு தற்போது ஜான்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர் ஜான்சி தொகுதியை விட்டு ராணி லட்சுமிபாயாக சோனியாவை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட வேண்டும். இது குறித்து அவரிடம் பேச முயன்றேன். ஆனால் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்ததால் பேச முடியவில்லை.

சோனியாவை எதிர்த்து உமாபாரதி போட்டியிடுவதாக இருந்தால் நான் அங்கு சென்று பிரசாரம் செய்வேன்.. உமாபாரதியின் வெற்றியை உறுதி செய்வேன்.

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+