ஆந்திரத்தில் முழு அடைப்பு: ஊர் திரும்ப முடியாமல் திருப்பதியில் தமிழக பக்தர்கள் தவிப்பு
திருப்பதி: ஆந்திரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் திருப்பதி சென்றுள்ள தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசு அதை வழங்காததால் மத்திய பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

ஆனால் இதில் அரசு வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததாக குற்றம்சாட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 24-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இன்றைய தினம் ஆந்திரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்திலிருந்து திருப்பதி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து ஆந்திரம் புறப்பட்ட பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!