பெங்களூரில் பள்ளி வளாகத்தில் மாணவி பலாத்காரம்: பள்ளி தலைவர் அதிரடி கைது

பெங்களூர் மாரத்தஹள்ளியிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 6 வயதான 1ம் வகுப்பு மாணவி, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் முஸ்தபா என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப்பில் சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கு முன்பு இதே ஆசிரியர், ஒயிட்பீல்டிலுள்ள மற்றொரு பள்ளியிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தகுந்த விசாரணையின்றி ஆசிரியர்களை நியமித்த பள்ளிக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இம்மாதம் 17ம்தேதி முதலே பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் தீவிரமாகியுள்ளது. டெல்லியில் நிர்பயா பலாத்கார சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பை போல பெங்களூரிலும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு எம்.என்.ரெட்டி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் கமிஷனரானதும் பள்ளியின் நிறுவன தலைவர் ருஸ்டம் கேரவாலாவை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை தொடங்கினார்.
{ventuno}
இந்நிலையில் கோவா அருகே டையு டாமன் பகுதியில் ருஸ்டம் கேரவாலா இருப்பதாக தகவல் அறிந்த பெங்களூர் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தில் மெத்தனமாக இருந்து சிறுமிக்கு எதிரான குற்றச்செயலுக்கு மறைமுக காரணமாக இருந்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பலாத்காரங்களில் இருந்து சிறுமிகளை காப்பாற்றும் (posco) சட்டத்தின் 21வது பிரிவு, இந்திய தண்டனை சட்டத்தின் 201வது பிரிவு (போலீசாருக்கு சரியான தகவலை அளிக்காதது), மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் பிரிவு-23 ஆகியவற்றின்கீழ் பள்ளி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications