For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூனியர் உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்தியா.. டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்தது பிசிசிஐ!

ஜூனியர் உலக்ககோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜூனியர் உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்தியா | Oneindia Tamil

    டெல்லி: ஜூனியர் உலக்ககோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது.

    நியூசிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இதன் பைனல் மேட்ச்சில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.

    மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

    நெருக்கடி கொடுத்த இந்தியா

    நெருக்கடி கொடுத்த இந்தியா

    இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டது.

    47 ஓவர்களில் ஆல் அவுட்

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரைசதம் அடித்தார். ஆனால், மெர்லோ 79 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது.

    வெற்றியை சுவைத்த இந்தியா

    இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 38.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்த இந்திய அணி வெற்றியை சுவைத்தது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றது.

    பிசிசிஐ பாராட்டு

    ஜூனியர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் பரிசையும் அறிவித்துள்ளது.

    டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம்

    இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்ற காரணமாயிருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. அணிக வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும் அணியின் ஆதரவு ஊழியர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    English summary
    India has won U19 world cup. BCCI announces prize money for victorious India U19 team. Rahul Dravid, Head Coach India U19 – INR 50 lakhs, Members of India U19 team – INR 30 lakhs each, Members of the Support Staff, India U19 – INR 20 lakhs each
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X