பாஸ்வான் கட்சியுடன் கூட்டணியா? மோடி கூட்டத்தை புறக்கணித்த பீகார் பாஜக தலைவர்கள்!
முசாஃபர்பூர்: ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியுடன் கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் நடைபெற்ற நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணித்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி இடம்பெற்றிருந்தது. குஜராத் கலவரத்தை முன்வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறியது அக்கட்சி. அதன் பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு கொண்டிருந்தது பாஸ்வான் கட்சி.

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து காங்கிரஸ் அலட்சியமாக இருப்பதாகக் கூறி வந்தார் பாஸ்வான். பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இந்நிலையில் பீகாரின் முசாஃபர்பூரில் ராம்விலாஸ் பாஸ்வானுடன் இணைந்து மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியுடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத அம்மாநில பாஜக தலைவர்கள் பலரும் மோடி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதனால் பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியில் பிளவு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications