For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலைவாசி உயர்வைக் கண்டித்து “வெங்காய” மாலை- பீகார் எம்.எல்.ஏவின் சட்டசபை விஜயம்

Google Oneindia Tamil News

பாட்னா: நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனாதாதள கட்சியின் எம்.எல்.ஏ தினேஷ் குமார் சிங், பீகார் சட்டசபைக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு மாலை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகதான் காரணம். அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்களித்த மக்களுக்காகதான் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தானும் பொதுமக்களில் ஒருவன் என்பதால் இந்தக் கடும் விலை உயர்வுக்கு எதிராக போராடி வருவதாகவும் கூறியுள்ளார்.

விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி 400 முதல் 500 சதவீதம் விலை உயர்த்தி மார்க்கெட்டில் விற்கிறார்கள். நமது நாட்டில் மொத்த விற்பனையாளர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு எதிராக எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் நினைக்கும் விலைக்கே பொருட்களை விற்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Protesting against rising inflation, an RJD MLA Wednesday stood at the entrance of Bihar Assembly with a garland of onions, potatoes other vegetables and fruits. The MLA, Dinesh Kumar Singh also known as Bhai Dinesh said, "I had made my intentions clear that I would garland the first BJP MLA I come across. After all, BJP is in power at the Centre and it is now responsible for the unchecked price rise all over the country. Hence I wanted to pay my respect to its legislators".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X