For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில் வளர்ச்சி பட்டியலில் பீகார் 'டாப்' .. தமிழகம் கட்ட கடைசி: மத்திய புள்ளியியல் துறை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கைப்படி 18 மாநிலங்களில் தொழில்வளர்ச்சிப் பட்டியலில் பீகார் முதலிடத்திலும் தமிழகம் கடைசி இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-13ம் ஆண்டுக்கான சிறப்பு பிரிவு அல்லாத 18 மாநிலங்களில் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

முதலிடத்த்ல் பீகார்

முதலிடத்த்ல் பீகார்

தொழில் வளர்ச்சியில் பீகார் மாநிலம் 10.73% வளர்ச்சியுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2010-11ம் ஆண்டில் பீகார் வளர்ச்சி 15.03%, 2011-12ல் 10.29% ஆக இருந்தது.

2வது இடத்தில் ம.பி. , 3வது இடத்தில் டெல்லி

2வது இடத்தில் ம.பி. , 3வது இடத்தில் டெல்லி

மத்திய பிரதேச மாநிலம் 9.89% வளர்ச்சியுடன் 2வது இடத்திலும் டெல்லி 9.33% வளர்ச்சியுடன் 3வது இடத்திலும் இருக்கின்றன.

கேரளா, ஒடிஷா

கேரளா, ஒடிஷா

கேரளா 8.24%, ஒடிஷா 8.09%த்துடன் 4 மற்றும் 5வது இடத்தில் இருக்கின்றன.

குஜராத் 6வது இடம்

குஜராத் 6வது இடம்

குஜராத்துக்கு 7.97% வளர்ச்சியுடன் 6வது இடம் கிடைத்துள்ளது. 7வது இடத்தில் ஜார்க்கண்ட் (7.43%), 8வது இடத்தில் மேற்கு வங்கம் 6.72% உள்ளன.

கடைசி இடத்தில் தமிழகம்

கடைசி இடத்தில் தமிழகம்

தமிழகம் 3.39% வளர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த சராசரி தொழில் வளர்ச்சி வீதமான 4.5% சதவீதத்தை விட தமிழகம் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது.

English summary
Bihar is the fastest growing State while Tamil Nadu is the worst performer, the latest data released by the Central Statistics Office (CSO) has revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X