For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2018: பிட்காய்ன் பிட்காய்ன்னு முதலீடு பண்றீங்களே.. இனி அதை ஒழிக்க போறாங்களாம்

பிட்காய்ன் உள்ளிட்ட கரன்சி வகைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் 2018: இது தெரியாம பிட்காய்ன்னு முதலீடு பண்றீங்களே...வீடியோ

    டெல்லி: பிட்காய்ன் உள்ளிட்ட ஆன்லைன் கரென்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

    பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். ஆனால் இவற்றை நாம் இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோன்று ஆயிரத்துக்கும் அதிகமான கரன்சிகள் உள்ளன.

    இந்தியாவில் ஒரு பிட்காயினின் ரூ.15 லட்சமாகும். இதன் மதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிட்காயினை பணம் கொடுத்தும் பங்குகளை விற்றும் வாங்கிக் கொள்ளலாம். தங்கத்துக்கு மாற்றாக இதை வாங்கிக் கொள்ளலாம்.

    பிட்காயின் வாங்கினரா

    பிட்காயின் வாங்கினரா

    இதற்கென வரி விதிப்பு முறையோ வங்கி கட்டுப்பாடுகளோ கிடையாது. அதனால் இதை அனைவரும் வாங்கி வருகின்றனர். கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிட்காயின்களை வைத்திருந்தவர்கள் இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டனர். கடந்த முறை பணமதிப்பிழப்பின்போது கருப்பு பணத்தை வைத்து பிட்காயின்களை வாங்கியுள்ளனரா என்று மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

    மத்திய அரசு அறிவுறுத்தல்

    மத்திய அரசு அறிவுறுத்தல்

    இந்நிலையில் இந்த பிட்காயின்கள் அல்லது கிரிப்டோ கரென்சிகளை வாங்காதீர் என்று மத்திய நிதி அமைச்சகம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசோ இந்தியாவில் உள்ள எந்த ஒழுங்குமுறை அமைப்போ இந்த பிட்காயிகள் ஏஜென்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே இதில் முதலீடு செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை காயின்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டாலும் இவை சட்டரீதியில் செல்லும் காயின்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பிட்காய்னை ஒழிக்க வேண்டும்

    பிட்காய்னை ஒழிக்க வேண்டும்

    இதுதொடர்பாக கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போதும் கேள்வி எழுப்பப்பட்டது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தியில் வாசிப்பு

    இந்தியில் வாசிப்பு

    2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

    தங்க பத்திரம்

    தங்க பத்திரம்

    அப்போது அவர் கூறுகையில் , பிட்காய்ன் எனப்படும் கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வம் இல்லை. அதுபோன்ற கரென்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தங்க பத்திரங்கள் மீது முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அவர்.

    English summary
    Bitcoin and any kind of crypto currency are not considered as legitimate. Government will take steps to eradicate that type of currencies, says FM Arun Jaitley.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X