For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10ம் தேதி நுழைவுத் தேர்வுக்கு வந்துடுங்க: பசுவுக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய அதிசயம்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஒன்றில் மாட்டின் புகைப்படம் இருந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வினியோகிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஹால் டிக்கெட்டில் கசிர் காவ் என்ற பெயருடன் மாட்டின் புகைப்படம் உள்ளது.

அந்த ஹால் டிக்கெட்டில் குரா தந்த் என்ற காளையின் மகளான கசிர் காவ் மே மாதம் 10 தேதி நடக்கும் நுழைவுத்தேர்வை பெமினா ஸ்ரீநகரில் உள்ள அரசு கல்லூரியில் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு ஹால் டிக்கெட் வழங்கியது குறித்து ஜம்மு காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜுனைத் ஆசிம் மத்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பசுவுக்கு நான்கு கால்கள், ஒரு வால், 2 பெரிய காதுகள் இருந்தாலும் அது அனைத்து கேள்விகளுக்கும் மூ என்று தானே பதில் அளிக்கும்? என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் வழங்கப்படும் இந்த ஹால் டிக்கெட்டை யாரோ வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளனர். இந்த சேட்டையை செய்தவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In what could be termed as an embarrassment to the Mufti Muhammad Sayeed government in Jammu and Kashmir, an admit card was issued to a cow to appear in an entrance examination in Srinagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X