விதி மீறிய பாஜக தலைவர்கள்.. பொது இடத்தில் பிலுபிலுவென பிடித்த "தில்" பெண் போலீஸ் அதிகாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலண்ட்ஷர்; உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகன ஓட்டி, அபராதம் கட்ட மறுத்து அடாவடியில் ஈடுபட்ட பாஜக தொண்டர் ஒருவரை பெண் போலீஸ் அதிகாரி கைது செய்தார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என உபி பாஜகவினர் போராட்டம் செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள புலண்ட்ஷரில் வாகன போக்குவரத்து சோதனை நடைபெற்றது. அப்போது அந்த பக்கம் பாஜகவை சேர்ந்த ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி வந்துள்ளார், அவரை சோதனை செய்த சிரேஷ்ட தாகூர் என்ற பெண் அதிகாரி அபராதம் விதித்துள்ளார்.

பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் திமிரில் அபராதத்தை கட்ட அவர் மறுத்துள்ளார். ஆனால் போலீஸ் அதிகாரி மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டார். கடுப்பான வாகன ஓட்டி மிக மோசமாக பெண் அதிகாரியை பேசியுள்ளார். இதனால் சிரேஷ் தாகூர் அவரை கைது செய்துள்ளார்.

வைரல் வீடியோ

அவரை எப்படி கைது செய்யலாம் என்று அந்தப் பகுதி பாஜகவினர் ஒன்று கூடி பெண் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதிகாரி மீது குற்றச்சாட்டு

அதிகாரி மீது குற்றச்சாட்டு

மேலும், அந்த பெண் அதிகாரி 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதனை கொடுக்க மறுத்ததால்தான் பாஜக தொண்டர் கைது செய்யப்பட்டதாகவும் பெண் அதிகாரி மீது பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். வாகன ஓட்டியை அடித்ததாகவும் கூறுகின்றனர்.

போராட்டம்

போராட்டம்

இதனால் பெண் போலீஸ் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை கடுமையாக மறுத்துள்ளார் பெண் போலீஸ் அதிகாரி.

உரிய நடவடிக்கை

உரிய நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடரும் பாஜக மிரட்டல்

தொடரும் பாஜக மிரட்டல்

இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண் போலீஸ் சாரு நிகம் என்பவர், பாஜகவின் மூத்த தலைவர் ராதா மோகன் தாஸ் அகர்வால் என்பவர் மிரட்டியதால் அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது. உபியில் பாஜக ஆட்சி நடப்பதால், பெண் அதிகாரிகளை தொடர்ந்து பாஜகவினரால் மிரட்டப்பட்டு வருகின்றறனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP workers in UP demanded government to transfer A senior woman police officer Shreshtha Thakur, who was fined and arrested BJP cadre.
Please Wait while comments are loading...