For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண மோசடி - கேரளாவில் போலி பணி உத்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் கைது

திருவனந்தபுரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கிக்கொண்டு போலி நியமன ஆணை கொடுத்த பாஜக பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தேவசம்போர்டுக்கு சொந்தமான பள்ளியில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு போலி பணி உத்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் திருவனத்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் அருகே வாமனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாத். முன்னாள் பஞ்சாயத்து பாஜக. இந்த நிலையில் அரசு பள்ளி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், கணினி இயக்குபவர் போன்ற பணிகள் வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

BJP leader arrested for cheating job aspirants

அவர் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதற்கு மாறாக மேலும் அவர் நடத்தி வரும் கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து போலி நியமன உத்தரவு அச்சடித்து பணம் பெற்றவர்களிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிவபிரசாத், அவரது கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்த அபிஜித் ஆகியோரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனையிட்ட போது பல்வேறு பணிகளுக்கான அரசு பணி நியமன உத்தரவு போலியாக அச்சடித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இருவரையும் ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The job fraud racket was busted on Saturday with the arrest of the kingpin Abhijith had allegedly collected Rs 2,40,000 from around 20 aspirants on the promise of giving clerical and non-teaching job positions in the schools run by Devaswom Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X