For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மோடிபெஸ்டோ'வாக மாறி வரும் பாஜகவின் 'மேனிபெஸ்டோ'.. அதாங்க லேட்!

|

டெல்லி: பாஜகவின் தேர்தல் அறிக்கை தாமதமாவதற்கு காரணம் தெரிய வந்துளளது. அதாவது நரேந்திர மோடியின் குறுக்கீட்டால் கடைசி நேரத்தில் சில திருத்தங்களைச் செய்து வருகிறார்களாம். அதனால்தான் லேட்டாகியுள்ளதாம்.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாள் நெருங்கி விட்ட போதிலும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. இதைச் சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால் தேர்தல் அறிக்கை ஏற்கனவே தயாராகி விட்ட போதிலும், மோடி குறுக்கிட்டு சில திருத்தங்களைக் கூறியுள்ளதால்தான் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.

BJP's manifesto or Modi-festo? Last minute changes behind delay, say sources

முன்னதாக முரளி மனோகர் ஜோஷி தயாரித்த தேர்தல் அறிக்கையைப் பார்த்த மோடியும், அவரது ஆதரவு தலைவர்களும் அதில் பல திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளனராம். தற்போது அதைசத் சேர்த்து வருகின்றனராம்.

தனது விஷன் 2014 கொள்கைக்கேற்ப தேர்தல் அறிக்கை வேண்டும் என்று கூறி விட்டாராம் மோடி. இதனால் பலதை சேர்த்தும், சிலதை நீக்கியும் வருகிறார்களாம்.

திங்கள்கிழமை தேர்தல் அறிக்கை தொடர்பாக நடந்த கட்சிக் கூட்டத்தில் சரியான சம நிலையில் தேர்தல் அறிக்கை என்று சுட்டிக் காட்டினார்களாம். இதனால்தான் தேர்தல் அறிக்கையை வெளியிட லேட் ஆகி வருகிறதாம்.

தற்போது தேர்தல் அறிக்கை 60 பக்கங்களைக் கொண்டதாக, மோடி விரும்பியபடியான தேர்தல் அறிக்கையாக உருமாறி வருகிறதாம்.

மேலும் தேர்தல் அறிக்கையில் மோடி விருப்பப்படி சப்கா சாத், சப்கா விகாஸ என்ற ஸ்லோகனும் இணைக்கப்பட்டுள்ளதாம்.

English summary
The BJP will release its manifesto for the general election on Monday, the day India starts voting for a new government in a process spanning nine days. Sources say the manifesto release has been delayed as Mr Modi and several top leaders of the party wanted the document drafted by veteran leader Murli Manohar Joshi to be tweaked to provide "greater clarity and sharper focus."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X