டெல்லியை போல மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு தடை... கவலையில் வியாபாரிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தீபாவளி பண்டிகையானது வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

Bombay HC upholds ban on sale of firecrackers in residential areas

கடந்த ஆண்டு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பட்டாசு விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர் 1 ஆம் தேதி வரை தடை விதித்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுவரை பட்டாசு வாங்கியவர்கள் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு விற்பனைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாட்டை தவிர்க்க , பட்டாசு விற்பனைக்கு நவம்பர் 1 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு தீபாவளி கறுப்பு தீபாவளியாக மாறிவிட்டது என்று டெல்லி வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்து, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படவில்லை என்பதால், மக்கள் அண்டை மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு தீபாவளி கறுப்பு தீபாவளியாக மாறிவிட்டது என டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல கோடி ரூபாய் அளவில் சிவகாசியில் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பட்டாசு விற்பனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் லட்சக்கணக்கான பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர் என சி.ஏ.ஐ.டி. எனப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bombay HC upholds ban on sale of firecrackers in residential areas

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற