கேரளா: செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்.. சிபிஎம் வேட்பாளர் சாஜி செரியன் வெற்றி!

கேரளா மாநிலம் செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளா இடைத்தேர்தல்...சிபிஎம் வேட்பாளர் சாஜி செரியன் வெற்றி!- வீடியோ

    கொச்சி: கேரளா மாநிலம் செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. ஜெயில் தண்டனை காரணமாக கைதான எம்எல்ஏக்கள், தேர்தல் நடக்காத தொகுதிகள், எம்எல்ஏக்கள் மரணம் என பல்வேறு காரணங்களால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.

    By-Poll 2018: Kerala Chengannur Assembly constituencies will see its crucial result today

    கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல் கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகரிலும் பொதுத்தேர்தல் நடைபெற்று இருந்தது. மே 28ம் தேதி நடந்த இந்த தேர்தலின் முடிவுகள்தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் செங்கண்ணுர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடந்தது. அந்த தொகுதியின் எம்எல்ஏவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேகே ராமச்சந்திரன் ராயர் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.

    அந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஷாஜி செரியன், காங்கிரஸ் சார்பாக விஜயகுமார், பாஜக சார்பாக பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.இது இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளை சேர்ந்த இன்னும் 10 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தற்போது இங்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து சிபிஎம் முன்னிலை வகித்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 67,303 வாக்குகள் பெற்றுள்ளார்.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார் 46,347 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை 35,270 வாக்குகள் பெற்றார். இதனால் சிபிஎம் கட்சி மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+