வீட்டு வாடகை அதிகமா இருக்கே...ரொம்ப கஷ்டப்படுறேன்...: பிரியங்கா காந்தி
டெல்லி: கவுன்சிலர் ஆன உடனேயே கார், பங்களா என செட்டில் ஆகின்றனர் நம் ஊர் அரசியல்வாதிகள். ஆனால் மிகப்பெரிய தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மனைவியும், சோனியாகாந்தியின் மகளுமான பிரியங்கா, 53ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.
டெல்லியில் வசித்து வரும் வீட்டிற்கான வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாகக் பிரியங்கா காந்தி கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேரு பரம்பரையைச் சேர்ந்த பிரியங்கா காந்தி பலகோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர். ராபர்ட் வதேரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அவரும் தொழிலதிபர்தான்.
டெல்லியில் உள்ள மத்திய அரசின் 6ம் பிரிவு குடியிருப்புப் பகுதியில், பிரமாண்டமான வீட்டில் பிரியங்கா காந்தி வசித்துவருகிறார். சுமார் 2,765 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த வீட்டிற்கு, ரூ.53,421 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக பிரியங்கா காந்தி, ரூ.8,888 மட்டுமே செலுத்திவந்துள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிரியங்கா, வீட்டு வாடகையை ரூ.8,888 ஆக குறைக்கும்படி வலியுறுத்தியிருந்தார். இதன்பேரில், பிரியங்காவுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது வாழ்க்கை வசதி மேம்பட்டுள்ளது. எனினும், அவர் ரூ.53,421 வாடகையை செலுத்தாமல், ரூ.31,300 மட்டுமே செலுத்துவதாக தெரியவந்துள்ளது.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். உண்மை இப்படியிருக்க, வீட்டு வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாக, அவர் கூறிவருவது பலதரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, ''மிகப்பெரிய வீட்டில் ஒரு பகுதியில்தான் வசித்து வருகிறேன். இதர பகுதியில் பாதுகாப்புப் படையினர் வசிக்கின்றனர். நான் பயன்படுத்தும் பகுதிக்கு உண்டான வாடகையை மட்டுமே செலுத்தி வருகிறேன். எனினும், இந்த தொகை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சொந்த வீடு வாங்க முடியாத அளவிற்கோ, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு ஏழையாகவா இருக்கிறார் பிரியங்கா காந்தி?.
-
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications