கடந்த ஆண்டு அளவுக்கு மீறி கொடுத்தோம்.. இந்தாண்டு காவிரி நீர் தர இயலாது: சித்தராமையா
பெங்களூர்: கடந்த வருடம் காவிரியில் அதிக தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம், இவ்வாண்டு அதற்கு வாய்ப்பு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக முதல்வரை வலியுறுத்துமாறு கோரிக்கைவிடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடகாவில் நிலவும் வறட்சியை காரணம் காட்டி, நீர் திறக்க முடியாது என்று கர்நாடக தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதையே கூறியுள்ளார். அவர் கூறியதாவது: கர்நாடகாவில் இந்த ஆண்டு, கடும் வறட்சி நிலவுகிறது. எனவே கர்நாடக அணைக்கட்டுகள் வறண்டு விட்டன. கர்நாடகாவிற்கே தண்ணீர் இல்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வாய்ப்பு இல்லை.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்தது, காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமாக தண்ணீர் வழங்கினோம். இம்முறை நீர் இல்லை. வரும் நாட்களில் மழை பெய்து தண்ணீர் அதிகரித்தால், அதன்பிறகு நீர் வழங்குவதில் பிரச்சினை இல்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications