காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக தொடங்கி வைத்த போராட்டம்- போர்க்களங்காகின மண்டியா, மைசூர்!
மண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன. மண்டியா போராட்டத்தில் ஒக்கலிகா கவுடா மடாதிபதி பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு மிக மிக குறைவாக வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு ஏற்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. தமிழ்நாடு அரசு, காவிரியில் 24,000 கன அடி நீரை கேட்டு தொடர்ந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து சொட்டு காவிரி நீரைத் தரவே கூடாது என முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது கர்நாடகா பாஜகதான். இதனைத் தொடர்ந்தே கன்னட விவசாயிகள் களத்தில் குதித்தனர். கர்நாடகா அரசியலுக்காக பாஜக பற்ற வைத்த நெருப்பு இன்று விவசாயிகளை வீதியில் இறக்கி விட்டுள்ளது.
மண்டியாவில் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவைத் தொடர்ந்து உக்கிரமாகி உள்ளனர். மண்டியாவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மண்டியா, மைசூர், பெங்களூர் நகரங்களில் பல்வேறு கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு கன்னட நடிகர், நடிகைகள் ஆதரவை தர தொடங்கி உள்ளனர்.
மண்டியா போராட்டத்தில் அப்பகுதியில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி பங்கேற்க உள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பெங்களூர் நகரத்துக்கு குடிநீர் வழங்கக் கூடிய நிலையத்தையும் பொதுப் பணித்துறை அலுவலகங்களையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் கொடும்பாவிகளை கொளுத்தியும் டயர்களையும் எரித்தும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர். பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை போராட்டங்களால் பதற்றமடைந்திருக்கிறது. கர்நாடக விவசாயிகளுடன் கன்னட ரக்ஷன வேதிகே போன்ற கன்னடர் இன அமைப்புகளும் இணைந்திருப்பதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனர். இதனையடுத்து இரு மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications