சிபிஐ என் மீது இன்னும் வழக்கே பதியவில்லை.. கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஐ தன் மீது இன்னும் வழக்கே பதியவில்லை என்று கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.

மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

CBI hasn't filed any case on me until says Karthi Chindambaram

இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து இருக்கிறது. தற்போது இவர் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை மேலும் கால அவகாசம் கேட்டது. நிறைய விஷயங்களை விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று சிபிஐ இன்று நீதிமன்றம் வாதாடி இருக்கிறது.

இப்போது 3 நாட்கள் கஸ்டடி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி பாட்டியாலா நீதீமன்றத்தில் இருந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

அதில் ''என் மீது இன்னும் வழக்கே பதியவில்லை. குற்றப்பத்திரிக்கை வந்த பிறகே உண்மைகள் வெளியே வரும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials raid in Karthi Chidambaram premises. Karthi Chidambaram arrested in Chennai airport in INX media by CBI. Court expands 3 days custody for Karthi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற