முதல் குழந்தை பிறந்தால் ரூ.6000 நிதியுதவி.. மத்திய அரசு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.6000 நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.6000 நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

central government announces Rs 6000 aid to pregnant women

இந்த தொகை தாய்மார்களின் வங்கி கணக்கில் நேரடியாக தவணை முறையில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி உதவி மூன்று தவணையாக வழங்கப்படும். முதலில் மகப்பேறு பதிவு செய்தவுடன் முதல் தவணையாக 1000 ரூபாயும், இரண்டாவது தவணையாக 6வது மாதத்தில் 2 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் 3வது தவணைத் தொகை வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள பெண்களுக்கும் இந்த உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
central government has announced a scheme to provide financial aid of Rs 6000 to pregnant women.
Please Wait while comments are loading...