For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தீஸ்கர் 2-ம் கட்ட தேர்தல்: முதல் சில மணி நேரத்தில் 15% வாக்குகள் பதிவு

By Mathi
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் முதல் சில மணி நேரங்களில் 15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்பை மீறி 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

Chhattisgarh polls: 2nd phase of voting begins

இந்நிலையில் 2-ம் கட்டமாக எஞ்சிய 72 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 19 மாவட்டங்களில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் 15% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 843 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 1,39,69, 890 பேர் வாக்களிக்கின்றனர். இன்றைய வாக்குப் பதிவையொட்டி சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Amid war-like security cover, the second phase of the assembly polls in Chhattisgarh, covering 72 constituencies, across 19 districts, began on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X