தாவுத் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் உறுதியானது.. ஐஎஸ்ஐ நடத்திய நாடகமும் அம்பலம் ஆனது!

தாவுத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தாவுத் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் உறுதியானது..வீடியோ

    டெல்லி: இந்தியா மட்டுமில்லாது உலகத்திற்கே தண்ணீர் காட்டிக் கொண்டு இருக்கும் முக்கியமான தாதா தாவுத் இப்ராஹிம். இந்த தாவுத் இப்ராஹிம் செயல்படாமல் அமைதியாக இருக்கும் போதெல்லாம் ஆக்சன் பிளாக்கில் குதித்துக் கொண்டு இருந்தவர் சோட்டா ஷஹில்.

    எப்போதாவது களத்தில் இறங்கிய சோட்டா ஷஹில் சில நாட்களில் மிக முக்கியமான தாதாவாக உருவெடுத்தான். தாவுத் இப்ராஹிமிற்கு இணையாக வளர்ச்சி அடையும் அளவிற்கு முன்னேறினான்.

    தற்போது சோட்டா ஷஹில் மரணம் அடைந்தது உறுதியாகி இருக்கிறது. மேலும் இதில் ஐஎஸ்ஐ அமைப்பு நடத்திய நாடகம் ஒன்றும் அம்பலம் ஆகி இருக்கிறது.

    சோட்டா ஷஹில்

    சோட்டா ஷஹில்

    இந்தியாவை கட்டுப்படுத்தும் முக்கியமான தாதா தாவுத் இப்ராஹிம். இவனின் வலது கையாக இருந்தவன் சோட்டா ஷஹில். அதேபோல் இடது கையாக செயல்பட்டவன் சோட்டா ராஜன். இதில் சோட்டா ராஜன் இந்திய போலீசால் கைது செய்யப்பட்டுவிட்டான். ஆனால் சோட்டா ஷஹிலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாவுத் இப்ராஹிமிற்கு சோட்டா ஷஹில் எப்போதும் நெருக்கமான நபராக இருந்து வந்து இருக்கிறான்.

    செய்தது என்ன

    செய்தது என்ன

    சோட்டா ராஜனை பலமுறை தாவுத் ஆணைக்கு இணங்க கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறான் சோட்டா ஷஹில். அதேபோல் மும்பை குண்டு வெடிப்பிலும் இவன் மூளை வேலை பார்த்து இருக்கிறது. மும்பையில் இருக்கும் பல பணக்கார நபர்களை மிரட்டி அவர்களிடம் பணம் வாங்கும் வேலையை இவன் பல நாட்களாக செய்து வந்து இருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    செய்தது என்ன

    செய்தது என்ன

    சோட்டா ராஜனை பலமுறை தாவுத் ஆணைக்கு இணங்க கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறான் சோட்டா ஷஹில். அதேபோல் மும்பை குண்டு வெடிப்பிலும் இவன் மூளை வேலை பார்த்து இருக்கிறது. மும்பையில் இருக்கும் பல பணக்கார நபர்களை மிரட்டி அவர்களிடம் பணம் வாங்கும் வேலையை இவன் பல நாட்களாக செய்து வந்து இருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சோட்டா ஷஹில் மரணம்

    சோட்டா ஷஹில் மரணம்

    கடந்த டிசம்பரில் இவன் மரணம் குறித்த தகவல் வெளியானது. தற்போது இந்த செய்து உறுதியாகி உள்ளது. அதன்படி இவன் கடந்த ஜனவரி மாதமே கராச்சியில் மரணம் அடைந்துவிட்டான் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவன் மாரடைப்பால் மரணம் அடைந்ததும் உறுதியாகி இருக்கிறது. இவனது குடும்பம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் இடம் மாற்றப்பட்டு இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+