For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டம் விவகாரம்.. காங்கிரஸ்.. கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி ஓபன் சவால்

Google Oneindia Tamil News

ராஞ்சி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் நிலையில், இன்று ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பாகிஸ்தானியரையும் இந்திய குடிமகனாக அறிவிக்க காங்கிரஸ் துணிந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் எதிர்க்கட்சிகள் முஸ்லீம் மக்களிடையே அச்சத்தை பரப்புகிறது என்றும் பிரதமர் மோடி தனது பரப்புரையின் போது குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை மததுன்புறத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்து அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக நிறைவேற்றியதது

ஆரம்பத்திலேயே அடித்து ஆடும் மமதா.. மத்திய அரசின் பிளானுக்கு தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி.. அதிரடி! ஆரம்பத்திலேயே அடித்து ஆடும் மமதா.. மத்திய அரசின் பிளானுக்கு தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி.. அதிரடி!

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

அந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்று அச்சத்துடன் போராடி வருகிறார்கள். இதேபோல் பிற மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாக கூறி போராட்டங்களை நடக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான்இந்த போராட்டத்தை தூண்டிவிட்டு முன்னின்று நடத்துவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

ஜார்க்கண்ட் தேர்தல்

ஜார்க்கண்ட் தேர்தல்

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் பெர்கைட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரசுக்கு சவால்

காங்கிரசுக்கு சவால்

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நான் ஒரு ஓபனாக சவால் விடுக்கிறேன். "அவர்களுக்கு (காங்கிரசுக்கும் அதன் நட்பு கட்சிகளுக்கு) தைரியம் இருந்தால், ஒவ்வொரு பாகிஸ்தான் குடிமகனுக்கும் இந்திய குடியுரிமையை வழங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்த பின்னர் 'அந்த நாடு' அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யும்.

காங்கிரஸ் மீது புகார்

காங்கிரஸ் மீது புகார்

நாட்டில் பொய்கள் மற்றும் அச்சங்களை பரப்பும் அரசியலுக்கு காங்கிரஸ் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் காங்கிரஸ கட்சி இப்போது அவற்றின் மீது பச்சை பச்சையாய் பொய்களை பரப்புகிறது. உண்மையில் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் எந்தவொரு குடிமகனையும் பாதிக்காது.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

நான் மீண்டும் சொல்கிறேன், நாட்டின் எந்தவொரு குடிமகனும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டார். நாங்கள் உருவாக்கிய சட்டம், அண்டை நாடுகளில் உள்ள துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கானது." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
Citizenship Act : "I want to throw an open challenge to the Congress and its allies," PM Modi said, addressing a rally in Berhait for the ongoing Jharkhand election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X