For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே. வங்கத்தில் 13 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்... மம்தாவுக்கு நெருக்கடி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 13 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் நேபாள மகாடோ, பாக்முண்டி தொகுதியில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி-சுவேந்து அதிகாரி நேரிடையாக மோதும் நந்திகிராம் தொகுதியில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. அங்கு பலம் வாய்ந்த டப் கொடுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல்-பாஜக முக்கிய போட்டியாளர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை

சூடுபிடிக்கும் மேற்கு வங்க தேர்தல்

சூடுபிடிக்கும் மேற்கு வங்க தேர்தல்

தமிழகத்தைப்போல் மேற்கு வங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் சபதம். இதற்கு முன்பே பல திட்டங்களை வகுத்து விட்டார் அமித்ஷா. இதற்காக திரிணாமுல் கட்சியின் கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக பாஜக பக்கம் கொண்டு வந்தார். மம்தாவின் வலது கரமாக விளங்கிய சுவேந்து அதிகாரி உள்பட பல மூத்த தலைவர்கள் அமித்ஷா சொல் கேட்கும் கிளிப்பிள்ளையாக அப்படியே பாஜக பக்கம் ஒதுங்கினர்.

பாஜக-திரிணாமுல் கடும் போட்டி

பாஜக-திரிணாமுல் கடும் போட்டி

தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்று மொத்த பாஜக அணியே மேற்கு வங்கத்தில் வலம் வந்தது. ஆனால் தான் எதற்கும் சளைத்தவர் அல்ல என்பதை மம்தா நிரூபித்தார். பாஜகவுக்கு எதிராகவும், தனது கட்சியில் இருந்து சென்றவர்களுக்கு எதிராகவும் வீறு கொண்டு முழங்கினார் மம்தா. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில பிரபல பெங்காலி நடிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல்

பாஜக வேட்பாளர் பட்டியல்

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி அறிவித்தார். மம்தாவின் வலதுகரமாக இருந்து கருத்து வேறுபாட்டால் தற்போது பாஜக பக்கம் ஒதுங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் மம்தா.இதேபோல் மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவும் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் பட்டியல் வெளியீடு

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல்-பாஜக முக்கிய போட்டியாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 13 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் நேபாள மகாடோ, பாக்முண்டி தொகுதியில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் யார்?

நந்திகிராம் தொகுதியில் யார்?

மம்தா பானர்ஜி-சுவேந்து அதிகாரி நேரிடையாக மோதும் நந்திகிராம் தொகுதியில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. அங்கு பலம் வாய்ந்த டப் கொடுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் களமிறக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

English summary
The Congress has released the preliminary list of candidates for 13 constituencies in West Bengal. The party's senior leader, Nepal Makato, has been reported to be fielding in the Bakmundi constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X