காங்கிரஸுக்கு எங்கள் குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் ஆவார்.. சோனியா காந்தி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காங்கிரசின் அடுத்த தலைவர் நேரு குடும்பத்தில் இல்லையாம்- வீடியோ

  டெல்லி: காங்கிரஸுக்கு தன் குடும்பத்தில் இல்லாத ஒருவர் எதிர்காலத்தில் தலைவர் ஆவார் என்று சோனியா காந்தி பேட்டி அளித்துள்ளார்.

  காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தி விலகினார். மேலும் அந்த பதவியில் அவரது மகன் ராகுல் காந்தி அமர்ந்தார்.

  இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆட்சி குறித்தும், காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தும் தற்போது சோனியா காந்தி பேட்டி அளித்துள்ளார்.

  ஏன் பிரதமர்

  ஏன் பிரதமர்

  இந்த நிகழ்வில் அவரிடம் ஏன் நீங்கள் பிரதமர் ஆகவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ''என்னைவிட மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஆக அதிக தகுதி இருந்தது. அவர் மிகவும் திறமையான மனிதர். எனவேதான் அவரை பிரதமராக தேர்வு செய்தோம்'' என்று குறிப்பிட்டார்.

  அப்படி யோசிக்கவே இல்லை

  அப்படி யோசிக்கவே இல்லை

  மேலும் ''நான் பிரதமர் ஆவது குறித்து கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அப்படிப்பட்ட நினைப்பே எனக்கு வரவில்லை என்று கூறலாம். அப்போது காங்கிரசில் சிறந்த தேர்வாக இருந்தது அவர் மட்டும்தான் என்று மன்மோகன் சிங் குறித்து பேசியுள்ளார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  ஏன் விலகல்

  ஏன் விலகல்

  மேலும் ஏன் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என்றும் கூறியுள்ளார். அதில் ''காங்கிரஸ் கட்சி தவறான திசையில் செல்வது போல தெரிந்தது. காங்கிரசின் வீழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை. சில விஷயங்களில் என்னால் தைரியமாக முடிவெடுக்க முடியவில்லை. அதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  வேறு ஒரு நபர்

  வேறு ஒரு நபர்

  முக்கியமாக ''எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் ஆவார். நேரு குடும்பம் மட்டுமே காங்கிரஸ் கிடையாது. எங்கள் கட்சியில் நிறைய முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தலைவர் ஆவார். எங்கள் கட்சி எல்லோருக்குமானது'' என்றுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress will lead by someone outside from my family says Sonia Gandhi in a private meeting.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற