For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் கடைசி கட்ட தேர்தல்.. நேருக்கு நேர் மோதல்.. இந்த தொகுதிகள் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் நேருக்கு நேர் மோதுவதால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் முதற் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த இரண்டாம் கட்ட தேர்தலில், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமீ யாஜ்னிக் களம் இறக்கப்பட்டுள்ளார். இதேபோல பாஜகவுக்கு எதிராக இளம் வேட்பாளர்களையும் பெண் வேட்பாளர்களையும் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

தலைவர் பதவிக்காக இப்படி ஒரு போட்டியா? கயிற்றில் தொங்கியபடி அமர்க்களப்படுத்தும் தலைவர் பதவிக்காக இப்படி ஒரு போட்டியா? கயிற்றில் தொங்கியபடி அமர்க்களப்படுத்தும்

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

2017க்கு முன்னர் படிதார் சமூக மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்த ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ளதால் இம்முறை அவருக்கு வீரம்காம் தொகுதியை கட்சி ஒதுக்கியுள்ளது. இவரை எதிர்த்து இதே தொகுதியில் லகாபாய் பர்வாட் எனும் மூத்த தலைவரை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. காங்கிரசின் இளம் ரத்தமான ஜிக்னேஷ் மோவானி போட்டியிடும் வட்கம் தொகுதியில் பாஜக தனது மூத்த தலைவர்களில் ஒருவருவரான மணிலால் வகேலா என்பவரை களம் இறக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து காந்திநகர் தெற்கு தொகுதியில், பாஜக அல்பேஷ் தாகூரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஹிமான்ஷு படேல் போட்டியிடுகிறார். இதே ஆம் ஆத்மியை பொறுத்த அளவில், காந்திநகர் தெற்கில் டோலட் படேல், வீரம்காம் தொகுதியில் குன்வர்ஜி தாகூர், கட்லோடியா தொகுதியில் விஜய் படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

14 மாவட்டங்கள்

14 மாவட்டங்கள்

இந்த இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை முடிவடைந்தது. இதில் மொத்தம் 69 பெண் வேட்பாளர்கள், 285 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலில் 60%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகிய நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலிலும் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 2.51 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். அகமதாபாத், காந்திநகர், மெஹ்சானா, படான், பனஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவலி, மஹிசாகர், பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, ஆனந்த், கெடா மற்றும் சோட்டா உதய்பூர் என 14 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரசாரம்

பிரசாரம்

பிரசாரத்தை பொறுத்த அளவில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது கடைசி பேரணியை அகமதாபாத்தில் நடத்தினார். அதன் பின்னர் இரண்டு நாட்கள் அவர் சாலை மார்க்கமாக மக்களை தொடர்ந்து சந்தித்தார். அதேபோல மாநிலத்தின் மற்றொரு முக்கிய பகுதியான மெஹ்சானாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று பேரணிகளை மேற்கொண்டிருந்தார். மேலும் அகமதாபாத்தில் ஒரு பொதுக்கூட்டத்தையும், வதோதராவில் சாலை மார்க்கமாக மக்களையும் சந்தித்துள்ளார். காங்கிரஸை பொறுத்த அளவில் அதன் பிரசார யுத்தியை இம்முறை அக்கட்சி மாற்றி அமைத்திருக்கிறது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

அதாவது பாஜகவை போல முக்கிய தலைவர்களை காங்கிரஸ் இம்முறை பெரிய அளவில் நம்பியிருக்கவில்லை. மாறாக உள்ளூர் தலைவர்களை கொண்டு வீடு வீடாக பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இது காங்கிரஸின் பழைய பிரசார பாணியாகும். அதேபோல ஆம் ஆத்மியை பொறுத்த அளவில், தேர்தல் பணிகளை செய்வதற்கெனவே உள்ளூர் அளவில் ஊழியர்கள் பலம் பெரியதாக கிடையாது. பெரும்பாலும் டெல்லி மற்றும் குஜராத்தையொட்டியுள்ள மாநிலங்களிலிருந்து கட்சி ஊழியர்கள் குஜராத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆக இப்படியாக இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

English summary
As the 2nd phase of elections in Gujarat state has started today, the field has started to heat up as BJP, Congress and Aam Aadmi Party leaders are facing each other in certain constituencies. Chief Minister Bhupendra Patel's Katlodia, Hardik Patel's Veeramgam and Jignesh Movani's Vadgam constituencies have received major attention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X