For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய தடை விதித்த பெங்களூர் கோர்ட்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: ரஜினிக்கு கட்அவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம் செய்ய தடை விதித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐஎம்எஸ் மணிவண்ணன் என்பவர் நகரில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் கடந்த 26ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

Court orders Rajinikanth fans not to pour milk on his cutouts

நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளதை கொண்டாட அவரது ரசிகர்கள் நகரின் பல்வேறு இடங்களில் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்து அதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர்.

உரிய உணவு இல்லாமல் பல குழந்தைகள் பலியாகும் நிலையில் இவர்கள் இப்படி பாலை வீணடிக்கிறார்கள். ரஜினிகாந்த் ஒரு பொறுப்பான நடிகர். அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. அவர் தாமாக முன்வந்து தனக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று ரசிகர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ரஜினியின் கட்அவுட், பேனர்களுக்கு ஊத்துவதற்காக வாங்கும் பாலை குழந்தைகளுக்கு அளிக்கலாம் அல்லது ரசிகர்களே குடிக்கலாம். இது தொடர்பாக ரஜினிகாந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் நீதிமன்றம் உத்தவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா ரஜினிக்கு பத்ம் விபூஷன் விருது கிடைத்துள்ளதற்காக யாரும் கட்அவுட், பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு அவர் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கு வரும் ஏப்ரல் 11ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

English summary
A civil court in Bangalore has ordered issue of an emergent notice to superstar Rajinikanth on an injunction suit seeking him to "wilfully" advise his fans not to put flex banners and cutouts and not to "propitiate" milk on them "in the interest of justice and equity."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X