‘என்னய்யா கடை இது.. ஒரு துணிகூட நான் போடுற மாதிரி இல்லையே’.. கடைக்குள் புகுந்து அதகளம் செய்த மாடு!
அசாமில் துணிக்கடைக்குள் மாடு ஒன்று புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திஸ்பூர்: அசாமில் துணிக்கடை ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் அலற விட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி விடும். மனிதர்களின் சேட்டைகளுக்கு இணையாக விலங்குகளின் சேட்டை வீடியோக்களும் பார்ப்பவர்களை ரசிக்கச் செய்யும். அதனால்தான், செல்பி எடுத்த குரங்கு, போட்டோ எடுத்த அணில், யானையின் குளியல், ஹெட்போனை தூக்கிச் சென்ற பறவை என பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி விடுகின்றன.
அந்த வகையில், தற்போது அசாமில் நடந்த ஒரு சம்பவமும் இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்று, நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஷாப்பிங் போன மாடு
இந்தியாவைப் பொறுத்தவரை சாலைகளில் மாடுகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமில்லை. ஆனால், சாலையைத் தாண்டி மாடு ஒன்று ஷாப்பிங் போக முயற்சித்ததுதான் இணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இணையத்தைக் கலக்கி வரும் இந்த வீடியோ அசாம் மாநிலம் துப்ரியில் எடுக்கப்பட்டுள்ளது.

துணிக்கடை
அங்குள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் அதிரடியாக நுழைந்த மாடு ஒன்று, துணிக்கடைக்குள் தனக்கான ஆடையைத் தேடுவது போல், ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகிறது. தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டோம்.. எப்படி வெளியில் செல்வது எனத் தெரியவில்லையே என்ற குழப்பத்தில்தான் மாடு அப்படி சுற்றி வருகிறது என்றாலும், பார்ப்பதற்கு ஷாப்பிங் செய்வது போன்று வேடிக்கையாக அந்த வீடியோ உள்ளது.

பதறிப்போன ஊழியர்கள்
திடீரென மாடு கடைக்குள் நுழைந்ததால், அங்கிருந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொஞ்சம் பதறிப் போகின்றனர். மாடு அவர்களைத் தாக்கும் நோக்கத்தில் கடைக்குள்ளே நுழையவில்லை என்றாலும், மாட்டிற்கு வழியை விட்டு விட்டு, அவர்கள் ஒதுங்கி நிற்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. கடையில் இருந்தவர்தான் இந்த வீடியோவை எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சின்ன வீடியோ
13 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், நடுக்கடைக்குள் நின்றிருந்த மாடு, ஒரு வழியாக அங்கு சுற்றி, இங்கு சுற்றி, வெளியே செல்லும் பாதையைக் கண்டுபிடித்து, பின் வெளியில் சென்று விடுகிறது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோவை, நெட்டிசன்கள் பலவிதமான காமெடி கமெண்ட்களோடு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications