சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்!
புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயலானது ஒடிஸா மாநிலம் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140- 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் இந்த புயல் பாலசோருக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்த புயலால் ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த இரு தினங்களாக மேற்கண்ட மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
#CycloneYaas is 'very likely' to move north-northwestwards to reach near north Odisha coast close to north of Dhamra & south of Balasore by noon today, as a 'very severe cyclonic storm' with wind speed of 130-140 kmph (issued at 0300 hrs): India Meteorological Department (IMD) pic.twitter.com/iiHZxuOz1I
— ANI (@ANI) May 25, 2021

விமான சேவைகள்
இந்த புயலால் நேற்று முதல் ஒடிஸாவுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொல்கத்தா விமான நிலையம் இன்று காலை மூடப்பட்டது. மேற்கண்ட மாநிலங்களில் புயல் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.

கொந்தளிப்பு
மேலும் கடற்கரைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் புயலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநில அரசுகள் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்தன.

பாலசோருக்கு இடையே
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் யாஸ் புயல் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது. இந்த புயலின் முழு பகுதியும் கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையில் இது அதி தீவிர புயலாகவே முழுவதுமாக பிற்பகலில் கரையை கடந்தது.

யாஸ் கரை
இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில் யாஸ் கரையை கடந்த போது மணிக்கு 140 கி மீ. முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. யாஸ் புயல் வடக்கு- வடமேற்கில் நகர்ந்து 3 மணி நேரத்தில் தீவிர புயலாக வலு குறைந்துவிடும். அடுத்த 6 மணி நேரத்தில் யாஸ் புயல் மேலும் பலம் குறைந்துவிடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications