மகாராஷ்டிராவில் வன்முறையை தொடர்ந்து ஸ்ட்ரைக்.. கடைகள் அடைப்பு.. வாகன சேவை முடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி- வீடியோ

  மும்பை: மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

  பீமா கோரேகான் போரின் 200வது ஆண்டு நினைவு தினத்தை தலித் அமைப்புகள் புனேவில் நேற்று கொண்டாடின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தின.

  இந்த வன்முறையில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் நேற்று வன்முறை பரவியது.

  சலைகள் அடைப்பு

  சலைகள் அடைப்பு

  இதில் மும்பை புனே உள்ளிட்ட நகரங்களில் 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல முக்கிய சாலைகளை அடைத்து தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  வன்முறை - 100 பேர் கைது

  வன்முறை - 100 பேர் கைது

  நகர் பகுதிகளில் கடைகளை அடைக்கக்கோரியும் அவர்கள் அறிவுறுத்தினர். வன்முறை தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டனர்.

  முதல்வர் எச்சரிக்கை

  முதல்வர் எச்சரிக்கை

  இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்தார். மேலும் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

  மகராஷ்டிராவில் ஸ்ட்ரைக்

  மகராஷ்டிராவில் ஸ்ட்ரைக்

  இந்நிலையில் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்துக்கு மார்க்சிஸ்ட் உட்பட 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

  பள்ளி பேருந்துகள் இயக்கப்படாது

  இந்த முழு அடைப்பு போராட்டத்தால் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. பள்ளிகளை மூடுவதாக பள்ளிகள் அறிவிக்கவில்லை ஆனால் பள்ளி பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

  கடைகள் அடைப்பு

  பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தலித் ஒருவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு கோல்ஹபூர், பர்பானி, தானே உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

  கூடுதல் பாதுகாப்பு

  கூடுதல் பாதுகாப்பு

  இந்நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறை நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Dalit groups called for a shutdown in the Maharashtra state on Wednesday. Yesterday groups of Dalits, who were on way to an event to mark 200 years of the Bhima Koregaon battle were attacked in Pune.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற