For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 நாட்களில் 3000 காணாமல் போன குழந்தைகள் மீட்பு.. டெல்லி போலீஸ் பயன்படுத்திய அதிரடி தொழில்நுட்பம்!

டெல்லியில் கடந்த 4 நாட்களில் முக அங்கீகார அடையாள தொழில்நுட்பம் (Facial Recognition System) எனப்படும் முறை மூலம் கிட்டத்தட்ட 3000 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி போலீஸின் தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு- வீடியோ

    டெல்லி:டெல்லியில் கடந்த 4 நாட்களில் முக அங்கீகார அடையாள தொழில்நுட்பம் (Facial Recognition System) எனப்படும் முறை மூலம் கிட்டத்தட்ட 3000 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இவர்களிடம் இந்த தொழில்நுட்பம் நீண்ட நாட்களாக கைவசம் இருக்கிறது. ஆனால் டெல்லி போலீஸ் இதை பயன்படுத்தாமல், சோதனை கூட செய்து பார்க்காமல் இருந்து வந்தனர்.

    ஆனால் உச்ச நீதிமன்றம் இதை உடனடியாக பயன்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியது. அதனடிப்படையில் இப்போது இவ்வளவு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குழந்தைகளை தொலைத்துவிட்டு தேடுபவர்களுக்கு பெரிய நல்ல செய்தியாகி உள்ளது.

    சோதனை செய்தார்கள்

    சோதனை செய்தார்கள்

    முதலில் சோதனை முறையாக மொத்தமாக 45,000 குழந்தைகளின் முகம் பரிசோதிக்கப்பட்டது. பல்வேறு குழந்தைகள் நல காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் முகம் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 2930 குழந்தைகளின் முகம் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டது. வெறும் 4 நாட்களில் இந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்.

    எப்படி

    எப்படி

    குழந்தைகள் காணாமல் போன விவரம், அவர்களின் புகைப்படம் மத்திய அரசு ஆவணங்களில் இருந்தும், மாநில அரசு ஆவணங்களில் இருந்து டெல்லி போலீசால் பெறப்பட்டுள்ளது. பின் ''பேஷியல் ரெகக்னஷேஷன்'' எனப்படும் முக அங்கீகார அடையாள தொழில்நுட்பம் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது இருக்கும் முகத்தையும், ஆவணங்களில் இருக்கும் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

    வீட்டில் கொண்டு சேர்த்தார்கள்

    வீட்டில் கொண்டு சேர்த்தார்கள்

    இந்த 2930 குழந்தைகளும் அவர்கள் வீட்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். வெறும் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 3000 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். அதிலும் சிலர் 5 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுகிறது. டெல்லி போலீஸ் கைவசம் வைத்து இருக்கும் தொழில்நுட்பம் மிகவும் துல்லியமானது என்பதால், மிக சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்களிலும்

    மற்ற மாநிலங்களிலும்

    மீதம் இருக்கும் 42000 பேரின் முகங்களும் மீண்டும் இதில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அதே சமயம் தற்போது மற்ற மாநிலங்களும் இந்த சோதனை முறையை பயன்படுத்த உள்ளது. சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் டெல்லியிடம் இருந்து இதை வாங்க இருக்கிறது.

    English summary
    Delhi police use Facial Recognition System to find 3000 missing children in 4 days. They will this tech, for 42000 more missing children
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X