For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய்: கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. மத்திய அரசுக்கு ஐ.பி. வார்னிங்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் பிரச்சினை இப்படியே தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டும் இதே கருத்தை நேற்று கூறியிருந்தது.

புழக்கத்திற்கு ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் மக்கல் கொந்தளிப்புடன் உள்ளனர். சிறு சிறு போராட்டங்களையும், மாநில அரசுகள் போலீசாரின் லத்தியை கொண்டு அடக்குவது மக்களை இன்னும் கோபமடையச் செய்துள்ளன.

Demonetisation- Opposition may try to flare up riots warns IB

இந்தநிலையில் பொது நல வழக்குகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நாட்டில் கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கோர்ட் அப்போது எச்சரித்தது.

இதேபோன்ற எச்சரிக்கையை மத்திய உளவுத்துறையும், அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, அனைத்து மாநிலங்களிலுமே செயற்கையான கலவரங்களை உருவாக்கவும் எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது. மக்களை கலவரத்திற்கு தூண்டும் வேலையை தொடர்ந்து சில கட்சிகளும், அமைப்புகளும் முயன்று வருவதாகவும் எச்சரிக்கிறது உளவுத்துறை. கிராமங்களில் இந்த கலவரத்திற்கு விதை போடப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

English summary
The Supreme Court on Friday said that it feared riots would erupt if the government did not take immediate steps to address problems faced in the aftermath of demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X