For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம்- மும்பையில் கடை சூறை!!

By Mathi
Google Oneindia Tamil News

Devyani Khobragade
மும்பை: துணைத் தூதர் தேவ்யானி விவகாரம் தற்போது அமெரிக்காவுக்கு எதிரான போராட்டமாக மாறுகிறது. மும்பையில் "டோம்பினிஸ்" என்ற பீட்சா கடை மீது தேவ்யானி ஆதரவு அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் இந்திய பெண் துணை தூதர் தேவயானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாந்திரா கிழக்கில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் திடீரென அங்குள்ள டோம்பினிஸ் என்ற பீட்சா கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள்.

இதில் அந்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கின. இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதையடுத்து, கற்களை வீசியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் கேர்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

English summary
Activists of Republican Party of India (RPI) ransacked a Domino's Pizza outlet in a Mumbai suburb on Friday, demanding a ban on US goods until Washington apologises for the arrest and humiliating treatment meted out to Indian diplomat Devyani Khobragade (IFS), including body cavity search, strip-search and handcuffing, in New York that has touched off a furore back home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X