For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'லக்கி'யும் இல்லை, 'அன் லக்கி'யும் இல்லை பங்கஜ்... அட்வைஸ் கொடுத்த டோணி!

Google Oneindia Tamil News

டெல்லி: டோணி புகழ் பாடும் வீரர்கள் வரிசையில் கிரிக்கெட் வீரர் பங்கஜ் சிங்கும் சேர்ந்துள்ளார். தனக்கு டோணி நிறைய அறிவுரைகளை வழங்கியுள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் பங்கஜ் சிங்.

பங்கஜ் ஒரு வேகப் பந்து வீச்சாளர். ஆனால், இந்தியா கண்ட வரலாறு காணாத சூப்பர் பந்து வீச்சாளர் என்று நிச்சயமாக பங்கஜ் சிங்கை கூற முடியாது. ஆனால் இந்த வீரரின் கமிட்மென்ட்டை யாரும் குறை கூறவே முடியாது.

இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், செளதாம்ப்டனில் நடந்த போட்டியின்போது அறிமுகமானவர். தனது முதல் போட்டியில் வியர்க்க விறுவிறுக்க பந்து வீசியும் கூட ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அந்த வகையில் பிரபலமானவர் பங்கஜ் சிங்.

அந்த டூரின்போது டோணி தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து இப்போது மனம் திறந்துள்ளார் பங்கஜ் சிங். அதிலிருந்து சில....

பரிதாபமாக பார்த்த மக்கள் மத்தியில்

பரிதாபமாக பார்த்த மக்கள் மத்தியில்

நான் எனது முதல் போட்டியில் அவ்வளவு ஓவர்கள் வீசியும் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால் எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆனால் டோணி அதை வேறு மாதிரியாகப் பார்த்தார்.

நேர்மைதான் முக்கியம்

நேர்மைதான் முக்கியம்

நாம் நமது முயற்சிகளில் நேர்மையாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். எனக்கு உனது நேர்மையில் எந்த சந்தேகமும் இல்லை. குறையும் காணவில்லை என்றார் டோணி என்றார் சிங்.

179 ரன்கள்கள் கொடுத்து

179 ரன்கள்கள் கொடுத்து

தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கஜ் சிங் 179 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ரொம்பக் கஷ்டம் பாஸ்

ரொம்பக் கஷ்டம் பாஸ்

சிங் மேலும் கூறுகையில், அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இத்தனைக்கும் நான் நூறு சதவீத அர்ப்பணிப்புடன் பந்து வீசினேன். அந்த பந்து வீச்சுக்கு ஏற்றார் போல விக்கெட் கிடைக்கவில்லை.

2வது போட்டியில் விக்கெட் கிடைத்தாலும் கூட

2வது போட்டியில் விக்கெட் கிடைத்தாலும் கூட

2வது போட்டியில் நான் 2 விக்கெட்களை வீழ்த்தினேன். ஆனால் அது கூட கடைசி வரிசை வீரர்களின் விக்கெட்தான். எனவே அதுவும் எனக்கு திருப்தி தரவில்லை.

ஆஸி டூரில் இடம் கிடைத்தால்

ஆஸி டூரில் இடம் கிடைத்தால்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் எனக்கு இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்துவது என்பதி்ல நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்றார் சிங்.

தற்போது பங்கஜ் சிங் துலீப் டிராபி போட்டியில் விளையாடி வருகிறார்.

English summary
Pacer Pankaj Singh, who is having the tag of "Unlucky" has said that captain Dhoni told him that there is nothing called 'unlucky' in cricket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X