தூய்மை இந்தியா.... ரஜினியை விட்டுட்டு கமலை ஏன் அழைத்தார் மோடி?
டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பாஜகவுக்கு இழுக்க தமிழக தலைவர்கள் முதற்கொண்டு அகில இந்தியத் தலைவர்கள் வரை பலரும் முயன்று வரும் நிலையில் தனது தூய்மை இந்தியா சவாலுக்கு ரஜினிகாந்த்தை அழைக்காமல் கமல்ஹாசனை பிரதமர் மோடி அழைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி பாஜகவுக்கு வந்து விடுவார், அடுத்த தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவோம் என்ற பெரும் நம்பிக்கையில் தமிழக பாஜகவினர் உள்ளனர். ரஜினியும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சமீபத்திலும் கூட ரஜினியை பாஜகவினர் தொடர்ந்து தொடர்பு கொண்டபடி இருந்தனர். பாஜக தலைவர் அமீத் ஷாவே நேரடியாக ரஜினியை கட்சிக்குள் இழுக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டதாகவும் கூட கூறப்பட்டது.
இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் நடந்த மோடியின் தூய்மை இந்தியா பிரசாரத்திற்கு ரஜினிக்குப் பதில் கமல்ஹாசனை மோடி அழைத்து பலரை ஆச்சரியப்படுத்தியது.

கமல்...
தூய்மை இந்தியா சவாலுக்காக 9 பேரை மோடி பரிந்துரைத்திருந்தார். அதில் ஒருவர்தான் கமல்ஹாசன். சச்சின் டெண்டுல்கரும் இதில் அடங்கியிருந்தார். ஆனால் ரஜினிகாந்த்தின் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

சல்மான் கான்....
அதேசமயம், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கெல்லாம் கூட மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

என்ன காரணம்...
இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினியை விட்டு உலக நாயகன் கமல்ஹாசனை மட்டும் மோடி அழைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் அதிரடி...
அதேசமயம், கமல்ஹாசன் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தனது ரசிகர்கள் 9 லட்சம் பேர் நாட்டை தூய்மைக்கும் பணியில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்து அசத்தி விட்டார்.

வேண்டும் என்றே தவிர்ப்பா...
ரஜினி பெயரை மோடி வேண்டும் என்றே தவிர்த்தாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அல்லது ரஜினிகாந்த்துக்கு தர்மசங்கடம் வேண்டாம் என்று நினைத்துத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சாமிக்காகவா...?
சமீபத்தில் சர்ச்சைக்குரிய சுப்பிரமணியம் சுவாமி, ரஜினிகாந்த்தை பாஜகவில் சேர்ப்பதை விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். ஒரு வேளை சுவாமியின் கருத்துக்கு மோடி சம்மதம் தெரிவிக்கும் வகையில் இப்படி ரஜினியைத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications